/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபேட்டை அருகே கடைகளில் தொடர் திருட்டு நள்ளிரவில் மக்கள் துரத்தியும் தப்பிய கொள்ளை கும்பல்
/
அம்மாபேட்டை அருகே கடைகளில் தொடர் திருட்டு நள்ளிரவில் மக்கள் துரத்தியும் தப்பிய கொள்ளை கும்பல்
அம்மாபேட்டை அருகே கடைகளில் தொடர் திருட்டு நள்ளிரவில் மக்கள் துரத்தியும் தப்பிய கொள்ளை கும்பல்
அம்மாபேட்டை அருகே கடைகளில் தொடர் திருட்டு நள்ளிரவில் மக்கள் துரத்தியும் தப்பிய கொள்ளை கும்பல்
ADDED : நவ 08, 2025 04:50 AM
பவானி:அம்மாபேட்டை
அருகே நள்ளிரவில் நான்கு கடைகளில் திருடிய கும்பலை, மக்கள்
துரத்தியும் பிடிக்க முடியவில்லை. முன்னதாக கும்பல் வந்த கார்
பஞ்சராகி, மரத்தில் மோதியது. காரை கைப்பற்றி போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி பிரிவில்,
உரக்கடை, ஓட்டல், கருவாட்டுகடை, நகைக் கடை, மருந்துகடை என பல்வேறு
கடைகள் வரிசையாக உள்ளன. நேற்று காலை கடை உரிமையாளர்கள் வழக்கம்போல்
கடை திறக்க வந்தனர். ஆனால் நான்கு கடைகளிலும், ஷட்டர் பூட்டு
உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து அம்மாபேட்டை
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அப்பகுதி 'சிசிடிவி'
கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சிப்ட் டிசையர் காரில் நள்ளிரவில்
வந்த நான்கு பேர் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
நள்ளிரவு, 2:45
மணியளவில், முதலில் உரக்கடை ஷட்டரை திறக்க முயன்றனர். திறக்க
முடியாததால் அதை ஒட்டி இரண்டாவதாக இருந்த ஓட்டல் கடை பூட்டை உடைத்து
சிலிண்டரை திருடியுள்ளனர். மூன்றாவதாக அதை ஒட்டியிருந்த
கருவாட்டு கடை பூட்டை உடைத்து, மூன்று கிலோ வஞ்சிரம் மீன் கருவாடு
எடுத்துள்ளனர். பின் நகைக்கடை ஷட்டரை உடைத்து, 20 ஆயிரம் ரூபாயை
திருடியுள்ளனர். அங்கிருந்து கோனேரிப்பட்டி சாலை நகைக்கடை அருகே
குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எப்.சட்., பைக்கை திருட
முயன்றுள்ளனர்.
சைடு லாக் போடப்பட்டிருந்து. அதை உடைத்து திருட
முயன்றபோது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். இதனால்
நான்கு பேரும் காரை எடுத்துக்கொண்டு, பவானி சாலையை நோக்கி சென்றனர்.
கொள்ளையர்களை பின் தொடர்ந்த சிலர், பைக்கில் துரத்தி சென்றனர்.
குட்டை
முனியப்பன் கோவில் பகுதியில் சென்றபோது, காரின் முன்பக்க டயர்
பஞ்சராகி சாலையோர புளியமரத்தின் மீது மோதி நின்றது. இதனால் காரில்
இருந்து இறங்கிய கொள்ளையர்கள், அப்பகுதியில்
குடியிருப்புகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டி,
பல்சர் பைக்கை திருடிக்கொண்டு மீண்டும் அம்மாபேட்டை நோக்கி வந்தனர்.
அப்போது
துரத்தி வந்த மக்கள் வளைத்ததால், சித்தார்-குறிச்சி சாலையில் மின்னல்
வேகத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இதனிடையே கொள்ளை கும்பல் வந்த காரை
அம்மாபேட்டை போலீசார் மீட்டனர். காரில் கையுறை, மதுபாட்டில் இருந்தது.
அம்மாபேட்டை போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி
வருகின்றனர். கொள்ளை கும்பல் வந்த கார், கர்நாடகா மாநிலம்
பெங்களூருவில் திருடப்பட்டது என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

