sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் கோஷ்டி மோதல் டி.எஸ்.பி., உள்பட 5 பேர் இடமாற்றம்

/

ஈரோட்டில் கோஷ்டி மோதல் டி.எஸ்.பி., உள்பட 5 பேர் இடமாற்றம்

ஈரோட்டில் கோஷ்டி மோதல் டி.எஸ்.பி., உள்பட 5 பேர் இடமாற்றம்

ஈரோட்டில் கோஷ்டி மோதல் டி.எஸ்.பி., உள்பட 5 பேர் இடமாற்றம்


ADDED : ஜன 18, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 18, 2026 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் ஹோட்டல், லாட்ஜ் உரிமையா-ளர்கள், ஊழியர்கள் மோதிய விவகாரத்தில் டி.எஸ்.பி., உள்ளிட்ட 5 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே தனியார் லாட்ஜ், ஹோட்டல் உள்ளது. ஹோட்டல் உரி-மையாளர் ஈரோடு முத்துக்கவுண்டன்பாளை-யத்தை சேர்ந்த சுகுமார், 48. கடந்த, 15ல் லாட்ஜ் உரிமையாளரான ஈரோடு கொல்லம்பாளை-யத்தை சேர்ந்த சந்திரசேகரிடம் குறைந்த வாட-கைக்கு ரூம் கேட்டுள்ளார். லாட்ஜ் நிர்வாகத்தினர் தர மறுத்துள்ளனர். ஹோட்டல் உரிமையாள-ருக்கு ஆதரவாக, ஹோட்டல் ஊழியர்களான மேட்டுக்கடையை சேர்ந்த லோகநாதன், 36, துாத்-துக்குடியை சேர்ந்த ராஜகுரு, 31. சுகுமார் மகன் கவுதம், 21, ஆகியோர் லாட்ஜ் உரிமையாளரான சந்திரசேகர், ஊழியர்களான கனிராவுத்தர்கு-ளத்தை சேர்ந்த நடராஜ், 27, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 38. ஈரோடு நொச்சிக்காட்டுவலசை சேர்ந்த மாதேஸ்-வரன், 65, அந்தியூர் குருவரெட்டியூரை சேர்ந்த தீபன், 30. ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர்.லாட்ஜ் உரிமையாளர் சந்திரசேகர் மற்றும் ஊழி-யர்கள், ஹோட்டலுக்குள் சென்று அவர்களை சர-மாரியாக தாக்கியுள்ளனர். ஈரோடு சூரம்பட்டி போலீசார் இரு தரப்பிலும் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, ஹோட்டல் உரிமையாளரான சுகுமார், லோகநாதன், ராஜகுரு ஆகிய, 3 பேரையும், லாட்ஜ் ஊழியர்களான நடராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன், தீபன் ஆகிய, 4 பேர் என மொத்தம் 7 பேரையும் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ஹோட்டல் உரிமை-யாளர் மகன் கவுதமையும், லாட்ஜ் உரிமையாள-ரான சந்திரசேகரையும் போலீசார் தேடி வருகின்-றனர். முன்னதாக லாட்ஜ் உரிமையாளரான சந்தி-ரசேகரை போலீசார் பிடித்து, ஈரோடு அரசு மருத்-துவமனைக்கு அழைத்து வந்தனர். போலீசாரின் கவனக்குறைவால் அவர் அங்கிருந்து தப்பி

சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கவனக்குறைவாக பணியில் இருந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங், தாள-வாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சூரம்பட்டி எஸ்.ஐ., தினேஷை தாளவாடி போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஏட்டுகள் முருகேஷ், பாஸ்கர் ஆகிய இருவரும் கடம்பூர் போலீஸ் ஸ்டேஷ-னுக்கும், தனிப்பிரிவு ஏட்டு அருண் ஆயுதப்ப-டைக்கும் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us