/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது
/
போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது
ADDED : அக் 17, 2024 01:37 AM
போலீசார் என்று கூறி
பணம் பறித்த 5 பேர் கைது
பவானி, அக். 17-
சித்தோடு அருகே மசாஜ் சென்டர் தொடங்கிய சில நாட்களில், போலீசார் என்று கூறி பணம் பறித்த ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; ஐந்து நாட்களுக்கு முன், சித்தோடு அருகே கோணவாய்க்கால், ராமன் பாலக்காடு என்ற இடத்தில், மசாஜ் சென்டர் துவக்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர் போலீசார் எனக்கூறி மசாஜ் சென்டரில் நுழைந்தனர். அங்கிருந்த கார்த்திகேயனிடம், சட்ட விரோத செயல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 50 ஆயிரம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். கார்த்திகேயன் புகாரின்படி, சித்தோடு போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக, வீரப்பன்சத்திரம் வசந்தராஜ், 34; செங்கோடம்பள்ளம் கார்த்திகேயன், 39; லக்காபுரம் சதீஷ்குமார், 37; சூரம்பட்டி முருகேசன், 39, ஆனந்தகுமார், 39, ஆகியோரை கைது செய்தனர். ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

