/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் தாலுகாவில் தேங்காய் உலர் களங்கள் மூடல்வெளி மாவட்ட தொழிலாளர் 30,௦௦௦ பேர் வேலையிழப்பு

ADDED : மார் 21, 2025 01:18 AM
காங்கேயம் தாலுகாவில் தேங்காய் உலர் களங்கள் மூடல்வெளி மாவட்ட தொழிலாளர் 30,௦௦௦ பேர் வேலையிழப்பு
காங்கேயம்:காங்கேயம் தாலுகா பகுதியில், 900க்கும் அதிகமான தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் பிழியும் கிரஷிங் யூனிட்டுகளும் செயல்படுகின்றன. இது தவிர தேங்காய் பவுடர் ஆலைகளும் உள்ளன. இதன் மூலம் இந்திய அளவில் தேங்காய் தொழிலில் காங்கேயம் முதலிடம் பெற்று விளங்குகிறது. தேங்காய் பருப்பு விலையை நிர்ணயிக்கும் கேந்திரமாகவும் திகழ்கிறது.
தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக குறிப்பாக பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், குண்டடம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், தென்னை மரங்களில் நேய் தாக்குதல் அதிகரித்து வரத்து சரிந்துள்ளது. இதனால் தேங்காய் வரத்தின்றி பல நுாறு உலர் களங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர். உள்ளூர் தொழிலாளர்கள், திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு போய் விட்டனர்.
தற்போது காங்கேயம் பகுதியில், 500க்கும் குறைவான களங்களில் மட்டுமே தேங்காய் உடைப்பு பணி நடக்கிறது. தேங்காய் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு, எண்ணெய், தேங்காய் விலை உயர்ந்து கொண்டே போகிறது. நேற்றைய நிலவரப்படி தேங்காய் பருப்பு கிலோ, 163 ரூபாய் முதல், 169 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. 15 கிலோ தேங்காய் எண்ணெய் டின், 3,700 ரூபாய் வரை விற்பனையானது. தினசரி மார்க்கெட், கடைகளில் ஒரு தேங்காய், 35 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் தனபால் கூறியதாவது: கடந்த ஆண்டு வெயில் அதிகமாக இருந்ததால் தேங்காய் வரத்து பல மடங்கு குறைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த பருப்பும் காலியானது.
சில மாதங்களாக வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த பருப்பு வரத்தானதால், விலையேற்றம் மெதுவாக இருந்தது. தற்போது இருப்பு பருப்பும் குறைந்து விட்டதால் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கேரளாவில் பிப்., மாதத்தில் வரத்து இருக்கும். இந்தாண்டு அதுவும் வரவில்லை. தமிழகத்தில் சீசன் துவங்கி காய் வரத்து கூடினால் மட்டுமே விலை குறைய
வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.