/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோட்ட அளவில் ௨௪ல் வேளாண் குறைதீர் கூட்டம்
/
கோட்ட அளவில் ௨௪ல் வேளாண் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 21, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்ட அளவில் ௨௪ல் வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு, டிச. 21-
ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகிக்கிறார்.
ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாய நில அளவை, வழித்தடம், பாதைகள், ஓடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற கோரிக்கை தொடர்பாக மனு வழங்கி தீர்வு பெறலாம்.

