/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3 லட்சம் மதிப்பு குட்காவுடன் 2 கார்கள் பறிமுதல்; இருவர் கைது
/
ரூ.3 லட்சம் மதிப்பு குட்காவுடன் 2 கார்கள் பறிமுதல்; இருவர் கைது
ரூ.3 லட்சம் மதிப்பு குட்காவுடன் 2 கார்கள் பறிமுதல்; இருவர் கைது
ரூ.3 லட்சம் மதிப்பு குட்காவுடன் 2 கார்கள் பறிமுதல்; இருவர் கைது
ADDED : ஆக 04, 2025 08:42 AM
பவானி: பவானி அருகே மயிலம்பாடியில், மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் கடைக்கு சென்றபோது, அப்பகுதியில் இரு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சந்தேகமடைந்து கார்களை சோதனை செய்தனர்.
இதில் இரு கார்களிலும், 300 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். பவானி அருகே ஊராட்சிகோட்டை, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர், சதீஷ்குமார், 25: சேலம் மாவட்டம், கருக்கங்காடு பகுதி சேர்ந்த, சக்திவேல், 32: ஆகிய இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.