ADDED : நவ 16, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறு-வனத்தில் இருந்து, தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, அவர-வர்கள் ஊரில் விடுவதற்காக, ஒரு மகேந்திரா வேன் நேற்று மாலை சென்றது.
கார்த்திக், 39, ஓட்டிச் சென்றார். தாராபுரம் பைபாஸ் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக நடு-ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் பயணித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட, 12 பேர் காயமடைந்தனர்.

