/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்
/
வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
புன்செய்புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டியை அடுத்த டாணாபுதுார் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்கப் வாகனத்தில் சோதனை செய்தனர். அதில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரவீனிடம், ஒரு லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பவானிசாகர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
* கோபி அருகே கொளப்பலுார்-பெருந்துறை சாலையில், தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பைக்கில் வந்த பெருந்துறையை சேர்ந்த, மணிவேல், 26, என்பவரிடம், 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.
* நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆசனுார் அருகே கொள்ளேகால் பிரிவில், ஈச்சர் வேனை சோதனை செய்ததில், சித்த நாயக்கா என்பவர், உரிய ஆவணமின்றி, 6.௨௦ லட்சம் ரூபாய் வைத்திருந்தார். பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

