sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அடையாளம் காண 11 ஆவணங்கள் வெளியீடு

அடையாளம் காண 11 ஆவணங்கள் வெளியீடு

அடையாளம் காண 11 ஆவணங்கள் வெளியீடு


ADDED : ஏப் 23, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள, 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு சென்று, ஓட்டுப்பதிவு செய்யலாம்.

ஈரோடு மாவட்டத்தில், 17.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய, 2,379 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 'பூத் சிலிப்'பில், வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், வாக்காளர் இடம் பெற்ற பாகம் பெயர், பாகம் எண், வரிசை எண், ஓட்டுச்சாவடி பெயர், தேர்தல் நாள், ஓட்டுப்பதிவு நேரம், ஓட்டுச்சாவடி செல்லும் வழிகாட்டி ஆகியவைமட்டும் இடம் பெறும்.

'பூத் சிலிப்' அடையாள ஆவணமாக ஏற்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தபடி, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம், தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 100 நாள் வேலை திட்ட பணி அட்டை மற்றும் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்.பி., - எம்.எல்.ஏ., அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து செல்லலாம்.

இதுவரை, 94 சதவீதம் 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 'பூத் சிலிப்' அந்தந்த ஓட்டுச்சாவடியில், பணியாளர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் பெற்று, ஓட்டை செலுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us