/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் தீமிதி விழா உள்துறை செயலர் அமுதா வழிபாடு
/
பண்ணாரி கோவிலில் தீமிதி விழா உள்துறை செயலர் அமுதா வழிபாடு
பண்ணாரி கோவிலில் தீமிதி விழா உள்துறை செயலர் அமுதா வழிபாடு
பண்ணாரி கோவிலில் தீமிதி விழா உள்துறை செயலர் அமுதா வழிபாடு
ADDED : மார் 27, 2024 12:55 AM

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
இதை தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடந்தது. கோவில் வளாகத்தில் நாள்தோறும் சிறப்பு பூஜை நடந்தது.
முக்கிய நிகழ்வாக குண்டம் விழா நேற்று அதிகாலை துவங்கியது. குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து, அதிகாலை 3:55க்கு பூசாரி பார்த்திபன் முதலில் தீ மிதித்தார்.
அதை தொடர்ந்து, தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்தனர். குண்டம் இறங்கிய பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்தனர்.
தமிழக அரசின் உள்துறை செயலர் அமுதாவும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு, சட்டசபையில் அறிவித்த படி, பிரசாதம் வழங்கப்பட வேண்டும். ஆனால், கோவில் பணியாளர்கள், கடமைக்கு லட்டு வழங்கினர்.