/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
.. ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
/
.. ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
ADDED : நவ 27, 2025 02:08 AM
ஈரோடு, ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடிக்கும், மாவிலிபாளையத்திற்கும் இடைப்பட்ட ரயில்வே தண்டவாள பகுதியில், வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 35 வயது இருக்கும் என்பதும், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

