/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்காளம்மன் கோவிலில் தீர்த்தக்குட திருவிழா
/
அங்காளம்மன் கோவிலில் தீர்த்தக்குட திருவிழா
ADDED : ஏப் 24, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே பாவாண்டக்கவுண்டனுார் அங்காளம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி தீர்த்தக்குட திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு, அம்மை அழைத்தல் நடந்தது. அதையடுத்து, கவுந்தப்பாடி-பவானி சாலையில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இருந்து, ஏராளமானோர் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
பின், காலை 10:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

