/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
31 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த 'மாணவர்கள்'
/
31 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த 'மாணவர்கள்'
ADDED : ஆக 13, 2024 05:52 AM
நம்பியூர் : நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1992-93ல் பிளஸ் ௨ படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொருவராக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராமசாமி, சீனிவாசன், ரங்கநாதன், அய்யாசாமி, கோவிந்தசாமி, பொன்வேல், ஈஸ்வரமூர்த்தி, குப்புசாமி உள்பட பலர் செய்திருந்தனர். பள்ளியில் தற்போது மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில், ௩ லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைத்து கொடுத்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ௪௯௧ மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர்.

