/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்
/
தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்
ADDED : மார் 31, 2024 04:20 AM
நம்பியூர்: நம்பியூர் தாலுகா காராப்பாடி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் கரட்டுப்பாளையம் 'பி' கிராமம் காரப்பாடியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, கிராம மக்கள் வீதிகளில் தடுப்பு மற்றும் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்துார் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதை ஏற்காத மக்கள், நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாக கூறி, தாலுகா அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நம்பியூர் தாசில்தார் மாலதி, வி.ஏ.ஓ., சண்முகம், மாவட்ட பதிவாளர் பூங்கொடி, நம்பியூர் சார்பதிவாளரிடம் மொபைல்போனில் பேசினர். தேர்தல் முடிவதற்குள் வழிகாட்டி மதிப்பீடு செய்து தரப்படும் என உறுதியளிக்கவே, போராட்டத்தை கைவிட்டு மக்கள் சென்றனர்.

