/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
/
சென்னிமலை கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
ADDED : மார் 24, 2024 01:36 AM
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, செங்குந்த முதலியார் சமூக பெரியவர்கள் முன்னிலையில், கொடி மரத்தில் சேவல் கொடியேற்றப்பட்டு நேற்று தொடங்கியது.
முன்னதாக காலை சுவாமி புறப்பாடு நடந்தது. சென்னிமலை கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, அங்கிருந்து சேவல் கொடியுடன் உற்சவமூர்த்திகள் படிக்கட்டு வழியாக மலை கோவிலை அடைந்தன.
அங்கு யாக பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிறகு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் கொடி மரத்தில், சேவல் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று இரவு, கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது. தேரோட்டம் நாளை காலை, 6:00 மணிக்கு நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை சேரும். 6ம் தேதி காலை பரிவேட்டை, இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி காலை மகாதரிசனம் நடக்கிறது. அன்றிரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.

