/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பாசிசத்தை வேரறுக்கும் தேர்தல்' சத்தியில் முத்தரசன் ஆவேசம்
/
'பாசிசத்தை வேரறுக்கும் தேர்தல்' சத்தியில் முத்தரசன் ஆவேசம்
'பாசிசத்தை வேரறுக்கும் தேர்தல்' சத்தியில் முத்தரசன் ஆவேசம்
'பாசிசத்தை வேரறுக்கும் தேர்தல்' சத்தியில் முத்தரசன் ஆவேசம்
ADDED : ஏப் 15, 2024 03:25 AM
சத்தியமங்கலம்: நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவை ஆதரித்து, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், சத்தியமங்கலத்தில் நேற்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த லோக்சபா தேர்தல் இரு அணிகளுக்கு இடையே நடக்கிற தேர்தல் அல்ல; பாசிசத்தை வேரறுக்கிற தேர்தல். ஹிட்லராக மறு உருவம் எடுத்து சர்வாதிகார ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். இரண்டாவது விடுதலைக்கான யுத்தம் தான் தற்போது நடந்து கொண்டுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார் என்பது பகல் கனவாக கலைந்து விடும். தேர்தல் அறிக்கையில் மோடி உத்தரவாதம் என குறிப்பிட்டிருக்கிறது. இதுவரை என்ன உத்தரவாதத்தை நீங்கள் கூறியதை நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள். சர்வாதிகாரத்தை, பாசிசத்தை வேரறுக்க ஓட்டு போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சத்தி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு பேட்டை வரை நடந்து சென்று ஓட்டு சேகரித்தார்.