/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை: தொழிலாளர் துறை உத்தரவு
/
கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை: தொழிலாளர் துறை உத்தரவு
கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை: தொழிலாளர் துறை உத்தரவு
கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை: தொழிலாளர் துறை உத்தரவு
ADDED : ஏப் 24, 2024 02:23 AM
ஈரோடு, ஏஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல், இரு கட்டங்களாக வரும், 26 மற்றும் மே, 7 ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும், கர்நாடகா மாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அங்கு நடக்கும் தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறதி செய்ய ஏதுவாக, தேர்தல் தினத்தில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் என, இங்கு பணி செய்யும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அனைத்து வகை பணியாளர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.