ADDED : ஏப் 15, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தமிழ் புத்தாண்டையொட்டி, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, நேற்று காலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர்.
மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். குண்டம் அமையும் பகுதியில் உப்பு துாவி வழிபட்டனர். நுாற்றுக்கணக்கோர் மொட்டை அடித்து அம்மனை வழிபட்டனர். அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

