/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்
/
தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்
தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்
தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்
ADDED : ஆக 11, 2024 03:03 AM
பவானி: -அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் கத்திரிமலை கிராமத்துக்கு, ஓரடுக்கு கப்பி சாலையே இருந்தது. இதனால் மக்கள் செங்குத்தான பாதையில் மலை கிராம மக்கள் நடந்து பய-ணித்தனர். தற்போது சாலை அமைக்கப்பட்டதால், வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர்.
அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீர் வினியோக திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்தியூர் பேரூராட்சி மயான வளாகத்தில் எரிவாயு மயானம் கட்டப்பட்-டுள்ளது. அந்தியூர் வாரச்சந்தையில், 5.74 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
தேவர்மலை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 108 ஆம்-புலன்ஸ் வாகனம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அளிக்கப்-பட்டுள்ளது.
அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து வெளி-யேறும் தண்ணீரால் மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பல கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்; மைக்கேல்பா-ளையம், குப்பாண்டாம்பாளையம் பஞ்.,ல் பாலம் கட்டப்பட்டுள்-ளது.
பர்கூர் மலையில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள-தாக, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பெருமிதம்
தெரிவித்தார்.

