/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாதேஸ்வரன் கோவிலில் சித்திரை விழா கோலாகலம்
/
மாதேஸ்வரன் கோவிலில் சித்திரை விழா கோலாகலம்
ADDED : ஏப் 15, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோபி, மாதேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள, வலம்புரி விநாயகர், பாலகுமரன், மாதேஸ்வரன் கோவில், சித்திரை திருவிழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது.
கடந்த, 11ம் தேதி மாலை, 108 சங்காபிேஷகம் நடந்தது. 13ம் தேதி இரவு வாஸ்து நகரில் இருந்து, சுவாமி மலர் பல்லக்கில் பவனி வருதல், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை சந்தியா வனத்துறையில் இருந்து, பால்குடம் எடுத்து வந்து, அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, இரவில் மறுபூஜை நடக்கிறது.

