/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 45.81 அடியாக சரிந்தது
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 45.81 அடியாக சரிந்தது
ADDED : ஏப் 25, 2024 04:40 AM
புன்செய்புளியம்பட்டி: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்
வரத்து குறைந்து அணை நீர்மட்டம், 45.81 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி, நீர் இருப்பு, 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதியில். கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. தற்போது கோடை துவங்கி, வெயில் கொளுத்துவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 31 கனஅடியாக சரிந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 45.81 அடியாகவும், நீர் இருப்பு, 3.5 டி.எம்.சி., யாகவும் இருந்தது. குடிநீர் தேவைகளுக்காக பவானி ஆற்றில், 200 கன அடி, கீழ் பவானி வாய்க்காலில், 5 கன அடி என மொத்தம், 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவுவதாலும், பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு இதே நாளில்
பவானிசாகர் அணை நீர்மட்டம், 83.30 அடி; நீர் இருப்பு, 17.4 டி.எம்.சி.,யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

