/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருதரப்பு மோதலால் காங்கேயத்தில் 'பகீர்'
/
இருதரப்பு மோதலால் காங்கேயத்தில் 'பகீர்'
ADDED : மே 19, 2024 02:49 AM
காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் கார்த்தி. மதுரையை சேர்ந்தவர். குடும்பத்துடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் மதுரையில் பல குற்ற ச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு, பைனான்ஸ் நடத்தி வரும் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சிவன்மலை, குருக்கத்தியை சேர்ந்த சஸ்வின் சென்றுள்ளனர். கார்த்தி மற்றும் தமிழ்ச்செல்வன் இடையே கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றால் தாக்கி கொண்டனர். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

