/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூத் சிலிப் வழங்குவது தொடர்பான ஆலோசனை
/
பூத் சிலிப் வழங்குவது தொடர்பான ஆலோசனை
ADDED : ஏப் 04, 2024 04:30 AM
ஈரோடு: வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உதவி தேர்தல் அலுவலர்கள் பேசியதாவது:
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு 'பூத் சிலிப்' வழங்கப்பட்டது என்ற தகவலை, மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். 'பூத் சிலிப்' வழங்கும் பணியை ஓட்டுப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே முடிக்க வேண்டும். 'பூத் சிலிப்' வழங்கும் பணிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும். 'பூத் சிலிப்' வழங்கும் போது, சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது குடும்பத்தாரிடம் வழங்கி பெற்றுக் கொண்டவர் பெயர் குறிப்பிட்டு கையொப்பம், மொபைல்போன் எண் தெளிவாக பெற வேண்டும்.
இவ்வாறு பேசினர்.

