/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோப்பு கரைசல் வாளிக்குள் விழுந்த பெண் குழந்தை பலி
/
சோப்பு கரைசல் வாளிக்குள் விழுந்த பெண் குழந்தை பலி
ADDED : ஜூன் 19, 2024 02:06 AM
கோபி:உத்தர பிரதேசம் மாநிலம், அலகாபாதைச் சேர்ந்தவர், பீம், 40. இவர் மனைவி ரீமா, 32, மற்றும் நான்கு மகள்கள், மகனுடன், ஈரோடு மாவட்டம் கோபி அருகே கெட்டிச்செவியூரில் குடும்பத்துடன் தங்கி, அதே பகுதியில் இயங்கும் நுாற்பாலையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு, ரீமா துணி துவைக்க பிளாஸ்டிக் வாளியில் சோப்பு கரைசலை கலந்து வைத்து விட்டு, சமையல் வேலையை கவனிக்க வீட்டுக்குள் சென்றிருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ரீமாவின் கடைசி மகளான, ராசி, 9 மாத பெண் குழந்தை, சோப்பு கரைசல் வைத்திருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த, பீமும் அவரது மனைவியும், குழந்தையை துாக்கி கொண்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால், வழியிலேயே குழந்தை இறந்தது. சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

