/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மே 25, 2024 02:49 AM
ஈரோடு: ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி போலீஸ் குழுவினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று கண்காணித்தனர். அப்போது ஒரு ஆசாமி மற்றொரு ஆசாமியிடம் கஞ்சா பொட்டலங்களை வழங்கியபோது இருவரையும் சுற்றி வளைத்தனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலம் மனோஜ்குமார், ௩2; கஞ்சாவை கடத்தி வந்து, பீகார் மாநிலம் அமான் குமார், 33, என்பவரிடம் கொடுத்தது தெரிந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், ஒரு நுால் மில்லில் அமான் குமார் வேலை செய்கிறார். இருவரையும் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம். ஈரோடு பகுதியில் பலருக்கு, கஞ்சாவை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மார்க்கெட் விலை ஏழு லட்சம் ரூபாய் என்றும், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சண்முகம் தெரிவித்தார்.

