ADDED : ஏப் 17, 2024 11:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பறக்கும் படையினர் சோதனையில், 10 லட்சத்து, 49,140 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட அளவில் இதுவரை, 5 கோடியே, 37 லட்சத்து, 67,469 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 4 கோடியே, 28 லட்சத்து, 20,303 ரூபாய் ரொக்கப்பணமாகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 2 கோடியே, 95 லட்சத்து, 65,213 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர். மீதி ஒரு கோடியே, 32 லட்சத்து, 55,090 ரூபாய், மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

