ADDED : ஏப் 17, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய ஆயுதப்படை கமாண்டர், கலெக்டர் கந்தசாமி, தேர்தல் பொது, செலவின, போலீஸ் பார்வையாளர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது. பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல். ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு, ரோந்துப்பணிகள், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு, பதட்டம் ஏற்படக்கூடிய இடங்களிலக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் குறித்து விளக்கப்பட்டது.
மத்திய ஆயுதப்படை வீரர்கள், உள்ளூர் போலீசார் இணைந்து ஒழுங்கிணைந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்யும் செயல் திட்டம் வகுத்தனர்.
