/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
28 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
/
28 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
ADDED : ஏப் 06, 2024 02:11 AM
ஈரோடு:ஈரோடு
தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் ஈரோடு மாநகரில் வாகன
தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் டூ-வீலர், நான்கு சக்கர வாகனம் மற்றும்
கன ரக வாகனத்தை குடிபோதையில் இயக்கியதாக, 28 பேரின் டிரைவிங்
லைசன்சை கைப்பற்றினர். தற்காலிகமாக இவற்றை ரத்து செய்ய
போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதேபோல்
ஹெல்மெட் அணியாமல் டூவீலர் இயக்கியதாக, 1,428 வழக்கு; டூவீலரின்
பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 230 வழக்கு; சீட் பெல்ட்
அணியாமல் கார் இயக்கியதாக, 223 வழக்கு, குடிபோதை வாகன இயக்கம், 38
வழக்கு; மொபைல் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 43 வழக்குகள் என, 2,956
வழக்குகள் பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.

