/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரு மாதத்தில் கிழிந்த பெயர் பலகை ஸ்டிக்கர்
/
ஒரு மாதத்தில் கிழிந்த பெயர் பலகை ஸ்டிக்கர்
ADDED : ஆக 25, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு மாதத்தில் கிழிந்த
பெயர் பலகை ஸ்டிக்கர்
அந்தியூர், ஆக. 25-
அந்தியூர் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இதில் தெருக்களை அடையாளம் காட்டும் வகையில், பல்வேறு வார்டுகளில் புதியதாக ஸ்டிக்கர் பலகை கடந்த மாதம் வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், பத்தாவது வார்டு நேரு நகர், அண்ணாசாலை, பவானி ரோடு செல்லும் பெயர் வழிகாட்டு பலகையின் ஸ்டிக்கர் கிழிந்துள்ளது. மர்ம ஆசாமிகள் யாரேனும் ஸ்டிக்கரை கிழித்தனரா அல்லது தரமில்லாததால் கிழிந்து விட்டதா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. கிழிந்த ஸ்டிக்கரை மாற்றிவிட்டு, புது ஸ்டிக்கர் ஒட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

