/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி அரசு பள்ளிகளில்1,780 பேர் நியூ அட்மிஷன்
/
கோபி அரசு பள்ளிகளில்1,780 பேர் நியூ அட்மிஷன்
ADDED : ஏப் 05, 2025 01:53 AM
கோபி அரசு பள்ளிகளில்1,780 பேர் நியூ அட்மிஷன்
கோபி:கோபி கல்வி மாவட்டத்தில் கோபி, சத்தி, தாளவாடி, டி.என்.,பாளையம் உள்ளிட்ட ஏழு யூனியன்களில், துவக்க முதல் நடுநிலை பள்ளிகள் வரை, 545 பள்ளிகள் உள்ளன. கோபி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 30 ஆயிரத்து 97, மாணவ, மாணவியர் பயின்றனர்.
நடப்பு, 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதுவரை, 1,780 மாணவ, மாணவியர் புதியதாக சேர்ந்துள்ளனர். இதில் ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1,100 பேர் சேர்ந்துள்ளதாக, பள்ளி கல்வித்
துறையினர் தெரிவித்தனர்.

