sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது

மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது

மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது


ADDED : ஏப் 04, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது

ஈரோடு:கோவை, சுந்தராபுரம், சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உக்கரத்தில், கே.ஆர்.டிரேடர்ஸ் பெயரில் விவசாய விளைபொருள் நிறுவனம் நடத்தினார். பருத்தி விதை, புண்ணாக்கு, கிழங்கு மாவை நிறுவனத்திடம் வழங்கினால், மார்க்கெட் விலையை கூட கூடுதல் விலை தருவதாக கூறினார்.

சத்தியமங்கலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் சில விவசாயிகள் விளைபொருட்களை வழங்கினார். ஆனால், தான் கூறியதை போல விளைபொருட்களுக்கு உண்டான, 2.59 லட்சம் ரூபாயை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், 2012ல் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் மோசடி வழக்கு பதிந்து, கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். இதனால் கிருஷ்ணனை, 13 ஆண்டாக தேடி வந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலுாரில் பதுங்கியிருந்தவலரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us