sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஹோட்டல்கள் மூடப்பட்டதால் பரிதவித்த வெளியூர்வாசிகள்

ஹோட்டல்கள் மூடப்பட்டதால் பரிதவித்த வெளியூர்வாசிகள்

ஹோட்டல்கள் மூடப்பட்டதால் பரிதவித்த வெளியூர்வாசிகள்


ADDED : ஏப் 24, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. சம்பளத்துடன் கூடிய விடுப்பை அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையமும், தொழிலாளர் துறையும்

வலியுறுத்தினர்.

ேஹாட்டல்களில் பணி செய்யும் டீ மாஸ்டர் முதல், புரோட்டா, சமையல் செய்வோர், பார்ட்ஸ்ட் புட் உட்பட துரித உணவு செய்வோரில், 80 சதவீதம் பேர் வெளியூர்காரர்கள், வெளி மாநிலத்தவர்களாக உள்ளனர். இதனால், அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், வழக்கமான அளவு விற்பனை ஆகுமா என்ற சந்தேகத்தாலும் பெரும்பாலான ேஹாட்டல்கள், சிறிய கடைகள், மெஸ்கள், சித்தரனங்கள், கலவை சாதம் விற்பனை செய்யும் கடைகள் வரை மூடப்பட்டுவிட்டன. பேக்கரிகள், டீக்கடைகள் மட்டுமே

திறந்திருந்தன.

இதனால் ஈரோடு மாநகர பகுதி மற்றும் புறநகரிலும் மக்கள் நடமாட்டம் கூட குறைந்து காணப்பட்டது. பஸ்களில் பயணிப்போரும் குறைந்து காணப்பட்டனர். இருப்பினும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையாக உள்ளதால், டூவீலர், கார்கள் உட்பட பிற வாகனங்களில் செல்வோரை அதிகம் காண

முடிந்தது.

அத்துடன் ஈரோடு மாவட்டத்தில் தங்கி பணி செய்வோர், தங்கள் ஓட்டை பதிவு செய்துவிட்டு வேலைக்கு வந்தவர்கள், குறிப்பிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டோர், கார்களில் ஈரோட்டை கடந்து செல்வோர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலை ஓர உணவகங்கள் கூட மூடப்பட்டிருந்ததால், ஊருக்குள் வந்து உணவுக்காக டூவீலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து அலைந்ததை காண

முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us