/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உச்ச நீதிமன்ற தீர்ப்பு;தி.மு.க., கொண்டாட்டம்
/
உச்ச நீதிமன்ற தீர்ப்பு;தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:37 AM
உச்ச நீதிமன்ற தீர்ப்பு;தி.மு.க., கொண்டாட்டம்
காங்கேயம்:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவித்தது. இந்த தீர்ப்பை தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். காங்கேயம் தெற்கு ஒன்றியம் சார்பில், சிவன்மலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
* உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே திரண்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், அவ்வழியே சென்ற மக்களுக்கு இனிப்பும் வழங்கினர்.

