sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்தி


ADDED : மார் 28, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இழப்பீடு வழக்கில்அரசு பஸ் ஜப்தி

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 35, தனியார் பஸ் டிரைவர். கடந்த, 2018, ஜனவரி 24ல், தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியதில் பலியானார். இறந்த முருகேசனின் குடும்பத்தினர், தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், முருகேசன் குடும்பத்தாருக்கு, 11.௯௬ லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. தொகையை செலுத்தாததால் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், வட்டியுடன் சேர்த்து, 16.௮௯ லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டார். இதையும் செலுத்தாத நிலையில், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us