ADDED : பிப் 23, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பி.எஸ்.சி., எழுத்து தேர்வு
ஈரோடு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், உதவி அரசு வக்கீல் கிரேடு--2 பணிக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. மாவட்டத்தில் ஒரே தேர்வு மையமாக ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வெழுத, 106 பேர் விண்ணப்பித்த நிலையில், 92 பேர் பங்கேற்றனர். முறைகேடுகளை தடுக்க ஒரு பறக்கும் படை, இரு வீடியோகிராபர், ஒரு மொபைல் குழு அமைக்கப்பட்டிருந்தது.

