/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நீதிமன்றம் சார்பில்சமரச நாள் கொண்டாட்டம்
/
காங்கேயம் நீதிமன்றம் சார்பில்சமரச நாள் கொண்டாட்டம்
காங்கேயம் நீதிமன்றம் சார்பில்சமரச நாள் கொண்டாட்டம்
காங்கேயம் நீதிமன்றம் சார்பில்சமரச நாள் கொண்டாட்டம்
ADDED : ஏப் 10, 2025 01:29 AM
காங்கேயம் நீதிமன்றம் சார்பில்சமரச நாள் கொண்டாட்டம்
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சமரச, வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். குற்றவியல் நீதிபதி தேன்மொழி முன்னிலை வகித்தார்.
இதில் பொதுமக்கள் கொடுக்கும் வழக்குகளில், இரு தரப்பிற்கும் நன்மை பிறப்பிக்கும் வகையில் காங்கேயம் துணை சமரச மையத்தின் மூலம், அனைத்து மக்களுக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்துடன், சமரசம் வழக்கறிஞர்கள் பஸ் ஸ்டாண்ட்ள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அரசு வழக்கறிஞர் முருகேசன், சமரச வழக்கறிஞர் குப்புசாமி, ஷாஜஹான் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.