ADDED : மார் 16, 2025 01:25 AM
அ நிறம் | அளவு
குழந்தை திருமண தடைசட்டத்தில் சிக்கிய வாலிபர்
ஈரோடு:கவுந்தப்பாடி, சலங்கபாளையம், கொட்டபுலி மேட்டை சேர்ந்தவர் கவுதம், 28; தனியார் நிறுவன தொழிலாளி. பள்ளியில் படிக்கும், 16 வயது சிறுமியை கடந்த, 12ல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நலகுழுவினர், சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்ட பிரிவில், கவுதம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
