/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசால் 'கம்பி' எண்ணும் தொழிலாளி
/
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசால் 'கம்பி' எண்ணும் தொழிலாளி
ADDED : ஏப் 12, 2025 01:33 AM
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசால் 'கம்பி' எண்ணும் தொழிலாளி
பெருந்துறை, காஞ்சிக்கோவில் அருகேயுள்ள குலத்தான் வலசை சேர்ந்தவர் பிரகாஷ், 26; காஞ்சிக்கோவிலை சேர்ந்த, 16 வயதான துாரத்து உறவுக்கார சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பிரகாஷ் ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதை மறைத்து சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த சிறுமி பிரகாஷூடன் பேசுவதை தவிர்த்துள்ளார். ஆனாலும் தன்னுடன் பேசுமாறு, சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், காஞ்சிக்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்நிலையில் சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் மனைவி என்று பதிவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பிரகாஷை, போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

