sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காளை மாட்டு சிலையை'அடக்கிய' போதை ஆசாமி

காளை மாட்டு சிலையை'அடக்கிய' போதை ஆசாமி

காளை மாட்டு சிலையை'அடக்கிய' போதை ஆசாமி


ADDED : மார் 03, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காளை மாட்டு சிலையை'அடக்கிய' போதை ஆசாமி

ஈரோடு,:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, காளை மாட்டு சிலை உள்ளது. நேற்று மதியம், 12:00 மணியளவில், 60 வயது மதிக்கதக்க ஆசாமி, சிலை பகுதிக்கு வந்தார். போதையில் இருந்தவர், ஒரு கயிறை காளை மாட்டின் கழுத்தில் கட்டினார். பிறகு அதை அடக்குவது போல் சைகை செய்தார். அங்கு நின்றபடி எம்.ஜி.ஆர்., பட பாடல்களை பாடவே, மக்களும் வேடிக்கை பார்க்க தொடங்கினர். இதனால் பாடுவதும், சிலையை அடக்க முயல்வதுமாக சேட்டைகளை தொடர்ந்தார். ஒரு வழியாக, 20 நிமிடங்களுக்கு பின் தானாகவே சென்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காளை மாட்டு சிலை பகுதி உள்ளது. இங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம். இதற்காக இப்பகுதியில் போலீஸ் போஸ்டும் உள்ளது. போலீசாரும் இதில் நின்றபடி பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக, போலீசார் இங்கு பணியில் இருப்பதில்லை என்று, அப்பகுதி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us