/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீரால் குடிநீர் நிறுத்தம்; இரு நாட்களுக்கு சப்ளைக்கு வாய்ப்பு இல்லை

ADDED : ஜூலை 31, 2025 06:16 AM
வேடசந்துார் : கரூர் காவிரி ஆற்றில் 1.40 லட்சம் கன அடி நீர் செல்வதால் வேடசந்துார் ,ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கான குடிநீர் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என பணியாளர்கள் கூறினர்.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் டேம் நிறைந்து கரூர் காவிரி ஆற்றில் 1.05 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு பவானி ஆற்றில் திறக்கப்பட்ட 30 ஆயிரம் கன அடி நீரும், உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட 4 ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றில் சேர்கிறது . இதனால் கரூர் காவிரி ஆற்றில் கட்டளை அருகே உள்ள வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கான காவிரி குடிநீர் மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் குறையாத நிலையில் மோட்டாரை இயக்க முடியாத நிலை உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல், நத்தம் பகுதி மக்களின் காவிரி குடிநீருக்கான கிணறுகளும் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் , ரங்கநாதன் பேட்டை என இரு இடங்களில் உள்ளன. ரங்கநாதன் பேட்டையில் மட்டுமே மோட்டர் இயக்கப்படுவதால் குறைவான நீராக 38 லட்சம் லிட்டர் மட்டுமே திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. காவிரி குடிநீர் திட்ட பணியாளர்கள் கூறுகையில்,' இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தண்ணீர் வடியும் வாய்ப்புள்ளது. அதன் பிறகு தான் மோட்டாரை இயக்க முடியும்' என்றனர்.