/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை செல்வவிநாயகர் கோயில் பிரதிஷ்டை விழா
/
வடமதுரை செல்வவிநாயகர் கோயில் பிரதிஷ்டை விழா
ADDED : மார் 14, 2024 04:29 AM

வடமதுரை: வடமதுரையில் திண்டுக்கல் ரோடு சந்தை கேட் எதிர்புறம் செல்வவிநாயகர் கோயில் பிரதிஷ்டை விழா நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய இவ்விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி செல்வ விநாயகருக்கு புனித நீருற்ற பிரதிஷ்டை நடந்தது. இதை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயில் அர்ச்சகர் காந்திகிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். பேரூராட்சி தலைவர் நிருபாராணி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, சுப்பிரமணி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் வீரமணி, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பலராமன், ஐ.டி., பிரிவு ஒன்றிய தலைவர் ரமேஷ், பா.ஜ., ஒன்றிய விளையாட்டு பிரிவு தலைவர் தன்னாசி, நலத்திட்ட பிரிவு தலைவர் பாண்டியராஜன், ஒன்றிய துணை த்தலைவர் கோமதி பங்கேற்றனர்.

