/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே கோயிலில் அடுத்தடுத்து நடந்த இரு திருவிழாக்கள்
/
ஒரே கோயிலில் அடுத்தடுத்து நடந்த இரு திருவிழாக்கள்
ADDED : ஏப் 09, 2025 03:40 AM
வடமதுரை : வடமதுரை அருகே கிராமத்தினர் இடையே கருத்து வேறுபாட்டால் ஒரே வாரத்திற்குள் அடுத்தடுத்து இரு கோயில் திருவிழாக்கள் நடந்தன.
சிங்காரக்கோட்டை பாறைப்பட்டி கிராமத்தில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடக்கும். மக்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டால் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. பிரச்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது.
அங்கு இரு குழுக்களுக்கும் தனித்தனியே தேதிகள் வழங்கி திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி தனபால் தரப்பினர் கடந்த வாரத்திலும், ராமசாமி தரப்பினர் இந்த வாரத்திலும் திருவிழாக்களை தனித்தனியே நடத்தி முடித்தனர்.

