/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளம்பரத்திற்காக அடிக்கப்படும் ஆணியால் பாழாகும் மரங்கள்
/
விளம்பரத்திற்காக அடிக்கப்படும் ஆணியால் பாழாகும் மரங்கள்
விளம்பரத்திற்காக அடிக்கப்படும் ஆணியால் பாழாகும் மரங்கள்
விளம்பரத்திற்காக அடிக்கப்படும் ஆணியால் பாழாகும் மரங்கள்
ADDED : மார் 13, 2024 12:14 AM

பஸ் ஸ்டாண்டில் இடையூறு
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ் ரேக்குகளில் நிறுத்த முடியாமல் நடுவில் நிறுத்துகின்றனர் .பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் சிரமம் ஏற்படுகிறது . இதை தடுக்க வேண்டும். ராஜா, திண்டுக்கல்.
..........-------ஆற்றுப் பாலத்தால் விபத்து
திண்டுக்கல் -திருச்சி ரோடு முள்ளிப்பாடி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவர் சேதத்தால் அடிக்கடி விபத்து நடக்கிறது . இந்த பகுதியில் தற்காலிகமாக தடுப்பு அமைக்காமல் நிரந்தரமாக கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். -ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.
.........-------இடிந்த நிலையில் கட்டடம்
தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகம் அருகே இடிந்த நிலையில் கட்டடம் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது .அருகில் செல்வோர் அச்சப்படுகின்றனர். அலுவலர்கள் மக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் இடிந்த பகுதியை சரி செய்ய வேண்டும் மாரிமுத்து, தாடிக்கொம்பு.
..............--------குப்பையை எரிப்பதால் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டை பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் உருவாகும் புகையால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. குப்பையை எரிப்பதை தவிர்க்க வேண்டும் . -காமாட்சி ஒட்டன்சத்திரம்.
...........--------குவிந்துள்ள குப்பை
திண்டுக்கல் என்.ஜி .ஓ. ,காலனி உழவர் சந்தை பின்பகுதியில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சிதறியும் கிடப்பதால் குப்பையை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோபால், திண்டுக்கல்.
..............--------மரத்தில் அடிக்கப்படும் ஆணி
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர். ஆணிகளால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது .மரத்தில் ஆணி அடித்து பலகைகளை தொங்க விடுவதை தடுக்க வேண்டும். முத்துக்குமரன், திண்டுக்கல்.
...........--------சாக்கடையை தூர்வாருங்க
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்கு கரை ரோட்டில் சாக்கடையில் குப்பையை கொட்டி அடைத்து கிடைப்பதால் பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது .துர்நாற்றமும் வீசுகிறது .சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்பிரமணி, திண்டுக்கல்.
.........--------

