ADDED : பிப் 28, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் வழியாக செல்லும் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி- மேலப்பாளையம் இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக பிப்.28(இன்று) வரை திண்டுக்கல்லோடு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் காலை 8:00 மணிக்கு கோவையில் புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு திண்டுக்கல் வர வேண்டும். அதன்பின் மீண்டும் மதியம் 1:35 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும். ஆனால் இந்த ரயில் நேற்று திண்டுக்கல் வரவில்லை. ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது 'தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக 'அதிகாரிகள் தெரிவித்தனர். காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே முன்னறிவிப்பின்றி ரயில் ரத்து செய்யப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

