/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' பேரிஜத்தில் புலி நடமாட்டம்
/
'கொடை' பேரிஜத்தில் புலி நடமாட்டம்
ADDED : டிச 23, 2025 04:26 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ரோட்டில் புலி நடமாட்டத்தை கண்ட பயணிகள் படம் பிடித்தனர்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கருஞ்சிறுத்தை, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. நேற்று பேரிஜம் ஏரிக்கு வேனில் சென்ற சுற்றுலா பயணிகள் மோயர் சதுக்கம் பேரிஜம் ஏரி ரோட்டை புலி கடந்து சென்றதை படம் பிடித்தனர். வனத்துறையிடம் கேட்டப் போது இவ்வனப்பகுதியில் புலி நடமாட்டம் துவக்கம் முதலே உள்ளது.
பயணிகள் பார்த்த புலி நான்கு குட்டிகளுடன் சென்றதாக தெரிவித்தனர். கொடைக்கானலில் புலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதே ரோட்டில் கருஞ்சிறுத்தை கடந்து சென்றது குறிப்பிடதக்கது.

