/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இ பைலிங் முறையை ரத்து செய்யும் வரை தொடர் போராட்ட முடிவு
/
இ பைலிங் முறையை ரத்து செய்யும் வரை தொடர் போராட்ட முடிவு
இ பைலிங் முறையை ரத்து செய்யும் வரை தொடர் போராட்ட முடிவு
இ பைலிங் முறையை ரத்து செய்யும் வரை தொடர் போராட்ட முடிவு
ADDED : டிச 13, 2025 01:31 AM
திண்டுக்கல்: ''இ- பைலிங் முறையை ரத்து செய்யும் வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு படுவார்கள்,'' என, வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு பொதுச்செயலாளர் பன்னீர் செல்வன் கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற கூட்டுக்குழு பொதுச்செயலாளர் கூறியதாவது:
அனைத்து வழக்குகளையும் இ- பைலிங் முறையை கைவிட்டு பழைய முறையிலே தாக்கல் செய்ய அனுமதிக்க தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்காமல் இ-பைலிங் முறையில் தான் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என மீண்டும் ஒரு சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் அனுப்பி உள்ளது. இது வழக்கறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றறிக்கையை திரும்ப பெறும் வரை காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இன்று நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தையும் புறக்கணிப்போம்.
இத்துடன் டிச.,15ல் சுற்றறிக்கை யின் நகலை எரிக்கும் போராட்டம், டிச.,16ல் தபால் அனுப்பும் போராட்டம், 17ல் கருப்புதுணி கட்டி போராட்டம், 2026 ஜன., 7ல் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

