/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாயமானவர் கொலை வீட்டின் முன் புதைப்பு
/
மாயமானவர் கொலை வீட்டின் முன் புதைப்பு
ADDED : மே 08, 2025 02:13 AM

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சித்தரேவு கிராமத்தில் சில தினங்களுக்கு முன் மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் அருகே புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
பழநி வேலாயுதம்பாளையம் புதுாரை சேர்ந்த தொழிலாளி முத்துச்சாமி 31. சித்தரேவில் மனைவி மாரியம்மாள் 27, இருமகன்கள், உறவினரான திருநங்கை வைதேகி 40 ,ஆகியோருடன் வசித்து வந்தார். ஏப்.29ல் முத்துச்சாமி மாயமானார். மே 2 ல் மாரியம்மாள் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் வீட்டின் முன்பு மண்குவியல் உடன் எம் சாண்ட் கொட்டப்பட்டு இருந்தது. முத்துச்சாமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு புகார் கூறினர். தாசில்தார் பிரசன்னா, டி.எஸ்.பி., தனஞ்செயன் முன்னிலையில் தோண்டியதில் முத்துசாமியின் உடல் கிடைத்தது. டாக்டர் சேக்அகமது பிரேதப் பரிசோதனை செய்தார். கொலை செய்து புதைத்தது யார் என பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

