ADDED : மே 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று ஊர்வலம் நடந்தது. மாநில துணைத் தலைவர்கள் ஆரோக்கியராஜ், அமர்நாத் தலைமை வகித்தனர். ஒருங்கிணைந்த ஓய்வதியத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன், ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை, பொதுச் செயலாளர் மயில், பொருளாளர் கணேசன் பங்கேற்றனர். ஊர்வலம் ஆர்.எம்., காலனியில் துவங்கி ரவுண்ட் ரோடு புதுாரில் உள்ள பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது.

