/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து போட்டியில் ஸ்ரீகுருமுகி பள்ளிக்கு முதலிடம்
/
கால்பந்து போட்டியில் ஸ்ரீகுருமுகி பள்ளிக்கு முதலிடம்
கால்பந்து போட்டியில் ஸ்ரீகுருமுகி பள்ளிக்கு முதலிடம்
கால்பந்து போட்டியில் ஸ்ரீகுருமுகி பள்ளிக்கு முதலிடம்
ADDED : ஏப் 05, 2025 05:17 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் இணைந்து நடத்தும் ஓட்டல் ஸ்வாகத் கோப்பை 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டிகள் ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரமம் பள்ளி அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், ேஹாட்டல் ஸ்வாகத் கிராண்ட் இணைந்து நடத்தும் ேஹாட்டல் ஸ்வாகத் கோப்பை 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டிகள் மார்ச்சில் திண்டுக்கல் புனித மரியன்னை, பார்வதீஸ் அனுகிரஹா பள்ளிகளில் நடந்தது.
மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளி அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 150 வீரர்கள் கலந்து கொண்ட தொடர் போட்டியாக நடந்தது. முதலிடம் பிடித்த ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரமம் பள்ளி அணிக்கு பரிசுக்கோப்பை , ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி அணி 2ம் இடம், ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி , எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 3ம் இடம் பிடித்தன.
இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி தாளாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர். ஸ்ரீகுருமுகி, வாசவி, எஸ்.எஸ்.எம்., உள்ளிட்ட பள்ளிகளின் முதல்வர்களும் கலந்து கொணடனர்.

