sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள்: கலெக்டர் தகவல்

/

 பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள்: கலெக்டர் தகவல்

 பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள்: கலெக்டர் தகவல்

 பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள்: கலெக்டர் தகவல்


ADDED : டிச 19, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''பழநி தைப்பூசத் திருவிழாவிற்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக,'' கலெக்டர் சரவணன் கூறினார்.

பழநி கோயில் தைப்பூச திருவிழா ஜன. 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பிப். 4 வரை நடக்கிறது.

இது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது : பக்தர்களின் வசதிக்காக , நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை, திண்டுக்கல் வழித்தடங்களில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக நடைபாதை புதர்கள், குப்பை, கற்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. தற்காலிக விளக்குகள் ,கழிப்பறைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை ஒருங்கிணைக்க , கண்காணிக்க பி.டி.ஓ.,க்கள் நிலையில் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளது.

முதலுதவி மருத்துவ முகாம்கள்,8 பைக் ஆம்புலன்ஸ் , ஆம்புலன்ஸ் வசதிகளுடன் மருத்துவ குழுவினர் மருத்துவ பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகன்கோயில், யானைப்பாதை ,படிப்பாதை, முடிமண்டபங்கள், தங்கும் விடுதிகள் , கிரிவீதியில் 892 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us